/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பைக்கில் 'ஹாயாக' செல்லும் சைபர் கிரைம் குற்றவாளிகள்பைக்கில் 'ஹாயாக' செல்லும் சைபர் கிரைம் குற்றவாளிகள்
பைக்கில் 'ஹாயாக' செல்லும் சைபர் கிரைம் குற்றவாளிகள்
பைக்கில் 'ஹாயாக' செல்லும் சைபர் கிரைம் குற்றவாளிகள்
பைக்கில் 'ஹாயாக' செல்லும் சைபர் கிரைம் குற்றவாளிகள்
ADDED : பிப் 25, 2024 04:03 AM
சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சைபர் குற்ற வழக்குகளை விசாரிக்க, புதுச்சேரியில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் சைபர் கிரைம் போலீஸ் பிரிவு உருவாக்கப்பட்டது.
எஸ்.பி., 2 இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் என தனி டீம் உள்ளது. சைபர் கிரைம் போலீசுக்கு தினசரி 15க்கும் மேற்பட்ட புகார்களும், தினசரி 3 வழக்குகளும் சராசரியாக பதிவாகி வருகிறது.
கடந்த 2 மாதங்களில் மட்டும் 60 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில், கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் பொதுமக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட 3 கோடி ரூபாயை சைபர் கிரைம் போலீசார் பறிமுதல் செய்து ஒப்படைத்தனர்.
இதுதவிர, ஏராளமான வழக்குகளில் குற்றவாளிகள் யார் என அடையாளம் கண்டறிந்தும், வாகனம் இல்லாததால் கைது செய்ய முடியாத நிலை உள்ளது. இது மட்டுமன்றி, சைபர் கிரைம் வழக்கில் கைது செய்யப்படும் நபர்களை தங்களின் சொந்த பைக்குகளின் பின்னால் அமர வைத்து நீதிமன்றத்திற்கு அழைத்து செல்கின்றனர்.
போலீஸ் ஜீப்பில் ஏறி செல்லகூனிக் குறுகி செல்லும் கைதிகள், பைக்கில் ஹாயாக அமர்ந்து செல்கின்றனர். வழியில் டீ கடையை பார்த்தால், 'ஏட்டையா வண்டியை நிறுத்துங்க... ஒரு டீ சாப்பிட்டு செல்லலாம்...' எனும் நிலைக்கு வந்துவிட்டனர்.
பைக்கில் அழைத்து செல்லும்போது கைதி தப்பி சென்று விடுவானோ என்ற அச்சத்துடனே போலீசார் செல்ல வேண்டியுள்ளது.
சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், சைபர் கிரைம் போலீசாருக்கு வாகன வசதிகளை அரசு செய்து தர வேண்டும்.