Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சுற்றுலா தளங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சுற்றுலா தளங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சுற்றுலா தளங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சுற்றுலா தளங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

ADDED : ஜன 16, 2024 06:41 AM


Google News
அரியாங்குப்பம் : பொங்கல் விடுமுறையையொட்டி நோணாங்குப்பம் படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் விடுமுறையால் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்து வருகின்றனர். வார விடுமுறையான சனி, ஞாயிற்றுக் கிழமையை தொடர்ந்து நேற்று பொங்கல் விழாவையொட்டி புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. நோணாங்குப்பம் படகு குழாமில் நேற்று காலையில் இருந்து மாலை வரை சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. படகு சவாரி செய்ய வந்தவர்கள் நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்தனர். காரில் வந்தவர்கள் படகு குழாமில் உள்ள கார் பார்க்கிங்கில் நிறுத்துவதற்கு இடமில்லாமல் புதுச்சேரி -கடலுார் சாலையோரங்களில் நிறுத்தி வைத்தனர்.

மேலும் கடற்கரை சாலை, மெரினா கடற்கரை, சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, அரவிந்தர் ஆஸ்ரமம், பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, வெங்கட்டா நகர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us