/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சி.பி.ஆர்., விழிப்புணர்வு நிகழ்ச்சி சி.பி.ஆர்., விழிப்புணர்வு நிகழ்ச்சி
சி.பி.ஆர்., விழிப்புணர்வு நிகழ்ச்சி
சி.பி.ஆர்., விழிப்புணர்வு நிகழ்ச்சி
சி.பி.ஆர்., விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : செப் 18, 2025 02:58 AM

புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், சி.பி.ஆர்., விழிப்புணர்வு நிகழ்ச்சி, கருத்தரங்க கூடத்தில் நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம், கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், நடந்த நிகழ்ச்சியை, கல்லுாரி முதல்வர் முத்துலட்சுமி துவக்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மணக்குள விநாயகர் கல்லுாரி பிசியோதெரபி துறை பேராசிரியர் வேல்குமார் கலந்துகொண்டு 'உயிர்களைக் காப்பாற்றும் கை' என்ற தலைப்பில் சி.பி.ஆர்., என்னும் இதயம் மற்றும் நுரையீரல் புத்துயிர் பெறுதல் குறித்தும்,சி.பி.ஆர்., என்பது, மாரடைப்பு ஏற்படும் நேரத்தில் இதயம் துடிப்பதை நிறுத்தும் போது செய்யப்படும் அவசர உயிர்காக்கும் செயல்முறையாகும்.இதய துடிப்பை சீராக்கவும், மூளைக்கு ரத்த ஓட்டத்தை தொடரவும், மார்பு பகுதிக்கு அழுத்தம் கொடுப்பது மற்றும் செயற்கை சுவாசம் கொடுப்பதுமாகும்.
இதனை மாணவர்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
சி.பி.ஆர்., சிகிச்சையை மேற்கொள்வது குறித்து மாணவர்களுக்கு செய்து காண்பித்தார்.
மணக்குள விநாயகர் அறிவியல் கல்லுாரியின் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை நாட்டுநலபணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ருக்மணி செய்திருந்தார்.