ADDED : செப் 01, 2025 11:08 PM
காரைக்கால்: காரைக்காலில் கார் மோதி வேளாங்கண்ணி திருவிழாவுக்கு சென்ற கணவன்,மனைவி காயமடைந்தனர்.
காரைக்கால், பூம்புகார் சுனாமி நகரை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் செல்லதுரை, 44; இவரது மனைவி ராசாத்தி. கடந்த 29ம் தேதி மனைவி ராசாத்தியை பைக்கில் செல்லதுரை அழைந்து கொண்டு வேளாங்கண்ணி கோவில் திருவிழாவுக்கு சென்றார்.
இவர்கள் நிரவி அக்கரைவட்டம் சாலையில் சந்திப்பில் சென்றபோது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின் பேரில் நகர போக்குவரத்து போலீசார் கார் டிரைவர் மயிலாடுதுறை அடுத்த சோழசக்கரநல்லுார் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், 30; மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.