/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியவரிடம் பணம் பெற்று மோசடி: தம்பதிக்கு வலை முதியவரிடம் பணம் பெற்று மோசடி: தம்பதிக்கு வலை
முதியவரிடம் பணம் பெற்று மோசடி: தம்பதிக்கு வலை
முதியவரிடம் பணம் பெற்று மோசடி: தம்பதிக்கு வலை
முதியவரிடம் பணம் பெற்று மோசடி: தம்பதிக்கு வலை
ADDED : செப் 07, 2025 06:50 AM
புதுச்சேரி : புதுச்சேரி, பெத்துசெட்டிபேட்டை, புது வீதியை சேர்ந்தவர் வைத்தியநாதன், 81. இவரிடம், 'மதர் பில்டர்ஸ்' என்ற பெயரில் கட்டடம் கட்டி விற்பனை செய்யும், லாஸ்பேட்டை முருகேசன் நகரை சேர்ந்த நற்குணம் மேரி, அவரது கணவர் தன்ராஜ் ஆகியோர் கட்டடம் கட்டி விற்பனை செய்வதற்காக கடந்த 2016ம் ஆண்டு வட்டிக்கு பணம் கேட்டனர்.
இதையடுத்து, வைத்தியநாதன் பல்வேறு தவணைகளாக, அவர்களிடம் ரூ. 34 லட்சம் கொடுத்துள்ளார். பின், கடந்த 2021ம் ஆண்டு தான் கொடுத்த பணத்தை வட்டியுடன் சேர்த்து கொடுக்கும்படி வைத்தியநாதன் கேட்டுள்ளார்.
அதற்கு, நற்குணம் மேரி, தன்ராஜ் ஆகியோர் 22 லட்சத்து 48 ஆயிரம், 9 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய்க்கான 2 செக்குகளைகொடுத்துள்ளனர்.அதனை வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லை என செக் திரும்ப வந்தது.
இதுகுறித்து வைத்தியநாதன் அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் நற்குணம் மேரி, அவரது கணவர் தன்ராஜ் ஆகியோர் மீது மோசடி வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.