/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கூட்டுறவு துறை காலி பணியிடம் நிரப்ப அறிவிப்பு வெளியீடுகூட்டுறவு துறை காலி பணியிடம் நிரப்ப அறிவிப்பு வெளியீடு
கூட்டுறவு துறை காலி பணியிடம் நிரப்ப அறிவிப்பு வெளியீடு
கூட்டுறவு துறை காலி பணியிடம் நிரப்ப அறிவிப்பு வெளியீடு
கூட்டுறவு துறை காலி பணியிடம் நிரப்ப அறிவிப்பு வெளியீடு
ADDED : ஜன 05, 2024 12:39 AM
புதுச்சேரி : கூட்டுறவு துறையில் காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவிந்திருந்தார். அதனை தொடர்ந்து யு.டி.சி., எல்.டி.சி., உள்ளிட்ட பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கடந்த 2016ம் ஆண்டு கூட்டுறவு துறையில் 40 காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
இப்பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படாமல் இருந்து. தற்போது, அதில், 38 இளநிலை ஆய்வாளர் காலி பணியிடங்களை நிரப்ப நேற்று அறிவிப்பு வெளியானது.
இந்த காலி பணியிடங்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு, விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. கூடுதல் விபரங்களை https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.