/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாகூர் காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்பாகூர் காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்
பாகூர் காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்
பாகூர் காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்
பாகூர் காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜன 05, 2024 06:37 AM

பாகூர் : பொங்கல் பண்டிகை கொண்டாட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் பாகூர் காவல் நிலையத்தில் நடந்தது.
எஸ்.பி., வீரவல்லபன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் சஜித், சப் இன்ஸ்பெக்டர்கள் நந்தக்குமார், விஜயக்குமார் முன்னிலை வகித்தனர். கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பொங்கல் பண்டிகை, மாட்டு பொங்கல், மஞ்சு விரட்டு மற்றும் விளையாட்டு போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
எஸ்.பி., வீரவல்லபன் பேசுகையில் ' மாட்டு பொங்கலன்று பாகூரில் நடைபெறும் மஞ்சு விரட்டு ஊர்வலத்தில் எந்த சலசலப்புக்கும் இடம் அளிக்க கூடாது. ஊர்வலத்தில் பங்கேற்கும் வாகனங்கள் குறித்த விவரங்களை முன்கூட்டியே போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இன்றி கொண்டாட்டங்கள் இருக்க வேண்டும். பிரச்னைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.