காலாப்பட்டு சிறையில் இசை நிகழ்ச்சி
காலாப்பட்டு சிறையில் இசை நிகழ்ச்சி
காலாப்பட்டு சிறையில் இசை நிகழ்ச்சி
ADDED : ஜன 08, 2024 05:06 AM

புதுச்சேரி: புத்தாண்டையொட்டி காலாப்பட்டு சிறையில் கைதிகள் மன அழுத்தம் குறைக்க இசை நிகழ்ச்சி நடந்தது.
காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள தண்டனை மற்றம் விசாரணை கைதிகள் மறுவாழ்வுக்காக சிறை நிர்வாகம் பல்வேறு பயிற்சிகள் மற்றும் மன அழுத்தத்தை குறைக்க பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் சிறைக்கு வந்து சென்ற நடிகர் பார்த்திபன், சிறை கைதிகள் மன அழுத்தத்தை குறைக்க இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.அதன்படி, பார்த்திபன் மனித நேசய மன்றம் சார்பில், புத்தாண்டையொட்டி, காலாப்பட்டு சிறையில் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில், பாடகர்கள் ஸ்ரீராம், சபிதா, தந்தை பிரியன் உட்பட பலர் கலந்து கொண்டு பாடி அசைத்தினர். சில கைதிகள் நடனமாடி ரசித்தனர்.ஏற்பாடுகளை நிகழ்ச்சியில் சிறை தலைமை கண்காணிப்பாளர் அழகேசன், கண்காணிப்பாளர் பாஸ்கரன் செய்திருந்தனர். பாடகர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.