குண்டும் குழியுமான சாலை
புதுச்சேரி, தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட உட்புற சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
புவனேஸ்வரி,புதுச்சேரி.
நாய்கள் தொல்லை
முத்திரையர்பாளையம், சேரன் நகரில் நாய்கள் தொல்லை உச்சகட்டத்தில் உள்ளது.
பிரபா, முத்திரையர்பாளையம்.
புதுச்சேரி - சேதராப்பட்டு அடுத்த கரசூர் கிராமத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
தவசி,கரசூர்.
துர்நாற்றம் வீசுகிறது
லாஸ்பேட்டை, கட்டபொம்மன் தெருவில் காலிமனைகளில் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
ராமசாமி,லாஸ்பேட்டை.
போக்குவரத்து நெரிசல்
தட்டாஞ்சாவடி, குடிமை பொருள் வழங்கல் துறை எதிரே தாறுமாறாக வாகனங்களை நிறுத்திவிடுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மீனா,புதுச்சேரி.
குப்பைத் தொட்டி சேதம்
புதுச்சேரி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை நுழைவு வாயிலில் உள்ள உழவர்கரை நகராட்சி குப்பை தொட்டி உடைந்து போய் உள்ளது.
மித்ரன்,புதுச்சேரி.