/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் ஆணையர் அறிவுறுத்தல் இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் ஆணையர் அறிவுறுத்தல்
இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் ஆணையர் அறிவுறுத்தல்
இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் ஆணையர் அறிவுறுத்தல்
இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் ஆணையர் அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 01, 2025 02:09 AM
அரியாங்குப்பம் : இறுதி ஊர்வலத்தின் போது, பட்டாசு வெடிப்பது, பேனர்களை வைப்பதை தவிர்க்க வேண்டும் என கொம்யூன் ஆணையர் ரமேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து, அரியாங்குப்பம் பஞ்சாயத்து கொம்யூன் ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தலின்படி, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் இறுதி ஊர்வலங்களில் பட்டாசு வெடிக்க கூடாது. பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், ஊர்வலத்தின் போது, சாலையில், மாலைகளை வீசக்கூடாது. மாலைகளை இடுகாட்டில் மட்டுமே வைக்க வேண்டும். போக்குவரத்து இடையூறாகவும், விபத்து ஏற்படுத்தும் வகையில், சாலையில், இரங்கல் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். அதை மீறி செய்தால், இறப்பு பதிவின் போது, உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.