/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழில்நுட்ப பல்கலை.,யில் வகுப்புகள் துவக்க விழா தொழில்நுட்ப பல்கலை.,யில் வகுப்புகள் துவக்க விழா
தொழில்நுட்ப பல்கலை.,யில் வகுப்புகள் துவக்க விழா
தொழில்நுட்ப பல்கலை.,யில் வகுப்புகள் துவக்க விழா
தொழில்நுட்ப பல்கலை.,யில் வகுப்புகள் துவக்க விழா
ADDED : செப் 11, 2025 11:11 PM

புதுச்சேரி:புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
விழாவை, பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். பேராசிரியர் ஞானு பிளோரன்ஸ் சுதா வரவேற்றார். முதுகலை சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் பழனிராஜா முதுகலை சென்டாக் இடங்களை நிரப்புவதில் உள்ள செயல்முறையை விளக்கினார்.
இயக்குநர்(கல்வி) விவேகானந்தன் பல்கலைக் கழகத்தில் பின்பற்றப்படும் கல்வி விதிமுறைகள் குறித்தும், இயக்குநர் செல்வராஜ், திட்டமிடல் மற்றும் மேம்பாடு குறித்தும் பேசினர்.
பேராசிரியர்கள் சாந்தி பாஸ்கரன், ரமேஷ்பாபு, நித்யானந்தன், ஸ்ரீநாத், மகாதேவன், தமிழரசி, பழனிவேல் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.பொறுப்பு பதிவாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை இணை டீன்கள் சாருலதா, அஜய் டி விமல்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.