/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதை பொருள் தடுப்பு ஆய்வு கூட்டம் கலெக்டர், அதிகாரிகள் பங்கேற்பு போதை பொருள் தடுப்பு ஆய்வு கூட்டம் கலெக்டர், அதிகாரிகள் பங்கேற்பு
போதை பொருள் தடுப்பு ஆய்வு கூட்டம் கலெக்டர், அதிகாரிகள் பங்கேற்பு
போதை பொருள் தடுப்பு ஆய்வு கூட்டம் கலெக்டர், அதிகாரிகள் பங்கேற்பு
போதை பொருள் தடுப்பு ஆய்வு கூட்டம் கலெக்டர், அதிகாரிகள் பங்கேற்பு
ADDED : ஜூன் 25, 2025 01:16 AM
புதுச்சேரி, : புதுச்சேரி மாநிலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்க அனைத்துத்துறை அதிகாரிகள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். கடந்த மாதம் துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார். இதில் ஒவ்வொரு துறையின் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் காவல்துறையில் பல்வேறு பகுதிகளில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 18 வழக்குகள் பதிந்து, 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கல்வித்துறை சார்பில், 15 அரசு பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. மேலும், சமுக நலத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது குறித்து விளக்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய கலெக்டர் குலோத்துங்கன் போதை பொருள் இல்லாத புதுச்சேரியை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பொதுமக்கள் போதை பொருள் நடமாட்டம் குறித்து தெரிந்தால் 94892 05100 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்போர் விவரம் பாதுகாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் இசிட்டாரதி, சீனியர் எஸ்.பி., கலைவாணன், நித்யா ராதாகிருஷ்ணன், மற்றும் காவல் துறை, கடலோர காவல்படை, மீன்வளத்துறை, சமூக நலத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.