/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காரைக்காலில் கடலோர காவல்படை தினம்; கடலில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகாரைக்காலில் கடலோர காவல்படை தினம்; கடலில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
காரைக்காலில் கடலோர காவல்படை தினம்; கடலில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
காரைக்காலில் கடலோர காவல்படை தினம்; கடலில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
காரைக்காலில் கடலோர காவல்படை தினம்; கடலில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
ADDED : பிப் 12, 2024 06:53 AM

காரைக்கால் : இந்திய கடலோர காவல்படை தினத்தையொட்டி, காரைக்கால் கடலில் கடலோர காவல் படையினர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
இந்திய கடலோர காவல்படை என்பது இந்திய ஆயுதப்படையின் துணைப்பிரிவாகும். இந்தியாவின் கடல் வளங்களை பாதுகாக்க இப்பிரிவு உருவாக்கப்பட்டது. 1977 பிப்., 1ம் தேதி முதல் இந்திய கடலோர காவல்படை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 48 வது இந்திய கடலோர காவல்படை வாரத்தையொட்டி, காரைக்காலில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதையொட்டி, காரைக்கால், வாஞ்சூர் தனியார் கப்பல் துறைமுகத்தில் இந்திய கடற்படை கப்பல்கள் மூலம் 150க்கு மேற்பட்ட பொதுமக்களை நடுக்கடலுக்கு அழைந்து செல்லப்பட்டு, கடலோர காவல் படையினர் பல்வேறு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் செய்து காண்பித்தனர்.
கலெக்டர் வர்கீஸ், எஸ்.பி., ஹர்சிங், இந்திய கடலோர காவல்படை கமாண்டிங் அதிகாரி விஜய் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில், மூன்று கப்பல்கள், கடலோரக்காவல் படையின் ஹெலிகாப்டருடன் கடலோர காவல்படையினர் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர்.
இந்திய கடல் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவினால் அவர்களை தடுப்பது, வான் வழியாக வரும் அச்சுறுத்தல்களை ஏவுகணை கொண்டு அழிப்பது உட்பட பல்வேறு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.