/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
ADDED : ஜன 08, 2024 04:53 AM
புதுச்சேரி: ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றி மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர் என்று முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி;
சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், சூரியனுக்கும், பூமிக்கும் இடையிலான புவி ஈர்ப்பு விசையில்லா ஒளிவட்ட சுற்றுப் பாதையில் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய வரலாறு படைத்துள்ளனர்.இந்திய அறிவியல் தொழில்நுட்பம் புதிய உச்சத்தை தொட்டுள்ளதை இந்த ஆதித்யா எல்-1 பணி காட்டுகிறது.மனித குலத்தின் உயர்வுக்கு பயன்படும் இந்த சூரிய ஆராய்ச்சியை சாத்தியப்படுத்தியுள்ள நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் சாதனை நம்மையெல்லாம் பெருமை கொள்ள செய்கிறது.சவால்களும், சிக்கல்களும் நிறைந்த இப்பணியை அர்ப்பணிப்போடு வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.