Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடல் அலையின் சீற்றத்தால் சின்ன வீராம்பட்டினம் கடற்கரை சேதம் மண் அரிப்பு

கடல் அலையின் சீற்றத்தால் சின்ன வீராம்பட்டினம் கடற்கரை சேதம் மண் அரிப்பு

கடல் அலையின் சீற்றத்தால் சின்ன வீராம்பட்டினம் கடற்கரை சேதம் மண் அரிப்பு

கடல் அலையின் சீற்றத்தால் சின்ன வீராம்பட்டினம் கடற்கரை சேதம் மண் அரிப்பு

ADDED : ஜூன் 08, 2025 04:03 AM


Google News
Latest Tamil News
கடல் அலையின் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை சேதமடைந்துள்ளது.

கடற்கரை பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரியாங்குப்பம் அடுத்த சின்ன வீராம்பட்டினம் கடற்கரை பகுதி பராமரிப்பு இல்லாமல் இருந்தது.

சென்னை மெரினா, கேரளா, கோவா, குஜராத் போன்ற இடங்களில் இருக்கும் நீலக்கடற்கரை போல சின்ன வீராம்பட்டினம் கடற்கரையை சுற்றுலா இடமாக மாற்ற மத்திய அரசு, கடந்த 2017ம் ஆண்டு, இதற்கான பணியை ஒப்பந்த அடிப்படையில், தனியார் நிறுவனத்தில் கொடுத்தது.

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல், ஓய்வு அறைகள், நிழற்குடை குடில்கள், கழிவறைகள், குளியல் அறைகள் மரத்தினால், அமைக்கப்பட்டது.

அந்த பகுதியில், ஆர்ச், சோலார் பேனல், லைப் கார்டு கண்காணிக்கும் டவர் என பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது.

கடந்த 2020ம் ஆண்டு, மத்திய சுற்றுலாத்துறை அதிகாரிகள் கடற்கரையை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். பசுமையாவும், ஆழம் குறைவாகவும், பாதுகாப்பாகவும் இருந்ததால், நீலக்கொடி கடற்கரை (ஈடன் பீச்) என பெயரிட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன் பின், புதுச்சேரி சுற்றுலாத்துறையினரிடம் கடற்கரை ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 2021ம் ஆண்டு, புதுச்சேரி சுற்றுலாத்துறையினர், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. வார இறுதி நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

இந்நிலையில், கடல் அலையின் சீற்றத்தால், ஈடன் கடற்கரை பகுதியில் 5 மீட்டர் அளவில், கடல் நீர் உள் புகுந்து, மண் அரிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், கடற்கரை பகுதியில் இருக்கும் ஆர்ச், நிழற்குடில்கள், சோலார் பேனல், மணல் பகுதிகள் சேதமடைந்து அழகான கடற்கரை அலங்கோலமாக மாறியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us