/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிறுவர் எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சி சிறுவர் எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சி
சிறுவர் எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சி
சிறுவர் எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சி
சிறுவர் எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சி
ADDED : செப் 29, 2025 03:03 AM
புதுச்சேரி: சிறுவர் பக்கம் அமைப்பு சார்பில் சிறுவர் எழுத்தாளருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் வீதியில் நடந்த நிகழ்ச்சியில் நிறுவனர் நாகேஷ் தலைமை தாங்கினார். பத்மநாதன் முன்னிலை வகித்தார். புதுச்சேரி அரசின் முன்னாள் சிறுவர் நலக் குழு உறுப்பினரும், சிறுவர் இலக்கியத்தில் புதுச்சேரி அரசின் நேரு குழந்தைகள் இலக்கிய விருது பெற்ற அரிமதி இளம்பரிதி சிறுவர் கலந்து கொண்டு இலக்கியம் குறித்து கலந்துரையாடினார்.
சிறுவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய தன்னம்பிக்கை, நேர் மறை எண்ணங்கள் மற்றும் பேச்சுக் கலையின் முக்கியத்துவங்களை கதைகள் மூலம் கூறினார். நிகழ்ச்சியில் அமைப்பின் உறுப்பினர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


