/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பயனற்ற நிலையில் சிறுவர் விளையாட்டு பூங்கா பயனற்ற நிலையில் சிறுவர் விளையாட்டு பூங்கா
பயனற்ற நிலையில் சிறுவர் விளையாட்டு பூங்கா
பயனற்ற நிலையில் சிறுவர் விளையாட்டு பூங்கா
பயனற்ற நிலையில் சிறுவர் விளையாட்டு பூங்கா
ADDED : மே 22, 2025 03:24 AM

நெட்டப்பாக்கம்: மடுகரையில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவினை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெட்டப்பாக்கம் தொகுதி, மடுகரை மரக்காளீஸ்வரர் கோவில் அருகில் அரசு மூலம் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில், சிறுவர், சிறுமியர்கள் விளையாட ஏணி, ஊஞ்சல், சருக்கு மரம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த விளையாட்டு பூங்காவில் மடுகரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள குழந்தைகள், பொதுமக்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயனடைந்து வந்தனர்.
இந்த பூங்கா போதிய பராமரிப்பு இல்லாததால், தற்போது சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்து, உடைந்து கிடக்கின்றன. இதனால், பூங்காவை சிறுவர்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது.
மேலும் பூங்காவை அருகில் உள்ள கோவில் நிர்வாகிகள் சுற்றுப்புற வேலி அமைத்து பூட்டி வைத்திருப்பதால் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் அங்கு சென்று விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே சிறுவர்கள் நலன் கருதி சிறுவர் பூங்காவினை உடனடியாக சீரமைத்து பூங்காவிற்கு சுற்றுச்சுவர் அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.