/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரூ.10 கோடி நலத்திட்ட உதவிகள் : முதல்வர் ரங்கசாமி வழங்கல் ரூ.10 கோடி நலத்திட்ட உதவிகள் : முதல்வர் ரங்கசாமி வழங்கல்
ரூ.10 கோடி நலத்திட்ட உதவிகள் : முதல்வர் ரங்கசாமி வழங்கல்
ரூ.10 கோடி நலத்திட்ட உதவிகள் : முதல்வர் ரங்கசாமி வழங்கல்
ரூ.10 கோடி நலத்திட்ட உதவிகள் : முதல்வர் ரங்கசாமி வழங்கல்
ADDED : ஜூன் 13, 2025 03:21 AM

வில்லியனுார்: வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் நடந்த விழாவில், ரூ. 10.90 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகளுக்கு விவசாய டிராக்டர், நடவு இயந்திரம் மற்றும் பிங்க் ஆட்டோ வழங்கும் விழா நடந்தது.
அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா முன்னிலை வகித்தனர். கலெக்டர் குலோத்துங்கன் வரவேற்றார். முதல்வர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 10 கோடியே 90 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, பேசினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இஷிதா ராட்டி, வில்லியனுார் வட்டார வளர்ச்சி அதிகாரி தயானந்த் டென்டுல்கர், இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கலைமதி உட்பட பலர் பங்கேற்றனர்.