/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாநில அந்தஸ்து கிடைக்கும் முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை மாநில அந்தஸ்து கிடைக்கும் முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை
மாநில அந்தஸ்து கிடைக்கும் முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை
மாநில அந்தஸ்து கிடைக்கும் முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை
மாநில அந்தஸ்து கிடைக்கும் முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை
ADDED : மே 13, 2025 06:19 AM
புதுச்சேரி : மாநில அந்தஸ்து விவகாரத்தை அரசு, தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தும் என முதல்வர் ரங்கசாமி கூறினார்.
சட்டசபையில், சென்டாக் மாணவர் சேர்க்கை தகவல் கையேட்டை வெளியிட்ட முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது;
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல திட்டங்களை வரிசையாக அறிவித்து ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறோம். அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் இந்த அரசு செயல்படுத்தும். அதன்படி, சமீபத்தில் அறிவித்த மீனவர்களுக்கான திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும். ரேஷன் கார்டிற்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் கோதுமையும் வழங்கப்படும்.
புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மரியாதை நிமித்தமாக என்னை சந்தித்தார். அப்போது, அவரிடம் மாநில அரசுக்கு நிதி, நிர்வாக விவகாரங்களில் மத்திய அரசின் உதவியை கோரினேன். என்.ஆர்.காங்., கட்சியின் கொள்கையான மாநில அந்தஸ்து விவகாரத்தை எங்கள் அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.
இப்பொழுதும் வலியுறுத்தினேன். தொடர்ந்து வலியுறுத்துவோம். இதுதொடர்பாக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். நம்பிக்கைதான் வாழ்க்கை. அதே நம்பிக்கையில் தான் மாநில அந்தஸ்திற்கு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கிடைக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.