Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஹட்கோவில் கடன் பெற்று கடல் அரிப்பு தடுக்கப்படும் முதல்வர் ரங்கசாமி உறுதி

ஹட்கோவில் கடன் பெற்று கடல் அரிப்பு தடுக்கப்படும் முதல்வர் ரங்கசாமி உறுதி

ஹட்கோவில் கடன் பெற்று கடல் அரிப்பு தடுக்கப்படும் முதல்வர் ரங்கசாமி உறுதி

ஹட்கோவில் கடன் பெற்று கடல் அரிப்பு தடுக்கப்படும் முதல்வர் ரங்கசாமி உறுதி

ADDED : மார் 27, 2025 03:51 AM


Google News
சட்டசபை கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்;

பிரகாஷ்குமார் (சுயேச்சை): முத்தியால்பேட்டை துாண்டில் முள் முறையில் கருங்கற்கள் கொட்டப்படவில்லை. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எப்போது இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

அமைச்சர் லட்சுமிநாராயணன்: முத்தியால்பேட்டையில் கடல் அரிப்பினை தடுக்க சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் 50.50 கோடி திட்ட மதிப்பீட்டினை தயார் செய்துள்ளது. 100 சதவீத நிதி கேட்டு மத்திய மீன்வள அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் ஒப்புதல் தரவில்லை. மத்திய அரசு தரவில்லையெனில் நபார்டு வங்கி மூலம் நிதி பெற்று இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

பிரகாஷ்குமார்: நான்கு ஆண்டுகளாக கேட்டு வருகிறேன். இன்னும் ஓராண்டு தான் ஆட்சி உள்ள சூழ்நிலையில் எப்போது தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

அமைச்சர் லட்சுமிநாராயணன்: நாம் நினைக்கிற மாதிரி உடனே கடலில் கற்கள் கொட்டி தடுப்பு ஏற்படுத்திட முடியாது. கடல் நீரோட்டம் எப்படி, கடலில் எங்கு மணல் அரிக்கிறது என்பதை ஆய்வு செய்து திட்ட அறிக்கை தயாரித்தால் மட்டுமே பசுமை தீர்ப்பாயமும் அனுமதி தருகிறது.

கல்யாணசுந்தரம்(பா.ஜ): பாண்டி ேஷார் திட்டத்தில் 1,400 கோடி ரூபாயில் கடல் அரிப்பு திட்டத்தை தயாரித்து வருகிறீர்கள். ஓராண்டு தான் இன்னும் உள்ளது. காலம் தாழ்த்தாமல் ஹாட்கோவில் கடன் வாங்கி இந்த திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

முதல்வர் ரங்கசாமி: துறை அமைச்சர் விரிவான பதிலை தந்துள்ளார். அப்படியும் கடல் அரிப்பு பிரச்னையை பற்றி தெரியாததை போன்று எம்.எல்.ஏ.,க்கள் பேசுகின்றனர். பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு உள்ளது. இந்த பணியை கடன் பெற்று தான் செய்ய முடியும். ஹட்கோ அல்லது நபார்டு மூலமாக கடன் பெற்று இப்பணி மேற்கொள்ளப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us