Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நாராயணசாமி பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது முதல்வர் ரங்கசாமி அட்வைஸ்

நாராயணசாமி பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது முதல்வர் ரங்கசாமி அட்வைஸ்

நாராயணசாமி பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது முதல்வர் ரங்கசாமி அட்வைஸ்

நாராயணசாமி பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது முதல்வர் ரங்கசாமி அட்வைஸ்

ADDED : மார் 25, 2025 03:58 AM


Google News
புதுச்சேரி: சட்டசபையில் பூஜ்யநேரத்தில் நடந்த விவாதம்:

பிரகாஷ்குமார் (சுயேச்சை): முத்தியால்பேட்டையில் உப்புத்தன்மையுடன் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதாக கூறி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தின்போது தவறான தகவல்களை நாராயணசாமி தெரிவித்தார். 2017ம் ஆண்டு அக்டோபரில் முத்தியால்பேட்டை தொகுதியில் குடிநீரில் 6,000 டி.டி.எஸ்., அளவு இருந்தது.

இதற்காக அப்போது முதல்வராக இருந்த நாராயணசாமியை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர் ஆட்சி முழுவதும் சுகாதாரமான குடிநீர் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது விநியோகம் செய்யப்படும் குடிநீரில் டி.டி.எஸ்., அளவு குறைந்துள்ளது.

இதையெல்லாம் மறைத்து பொய்யான தகவல்களை நாராயணசாமி பரப்புகிறார். இதை நான் கண்டிக்கிறேன். அவருக்கு ஏதாவது உண்மை தெரிய வேண்டுமென்றால் கூச்சப்படாமல் என்னிடமே தகவல்களை கேட்கலாம்.

முதல்வர் ரங்கசாமி: எத்தனையோ சிரமம், நிதி நெருக்கடி இருந்தாலும், அரசு திட்டங்களை செயல்படுத்தி தான் வருகின்றது. ஆனால் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தவில்லை என்று தான் பேசுவார். அன்மையில் கூட குடும்ப தலைவிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 500 உதவித்தொகை உயர்த்தினோம்.

இதுபற்றி நாராயணசாமி பேசும்போது, இந்த நிதி கிடைப்பதற்குள் பெண்கள் இறந்துவிடுவார்கள் என கூறியுள்ளார். இது தான் அவரது எண்ணமாக இருக்கின்றது.

அவர் பேச்சைப்பற்றி நாம் கவலைப்படக்கூடாது, அவர் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அவரை பற்றி புதுச்சேரி மக்களுக்கு தெரியும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us