லண்டனில் விருது முதல்வர் வாழ்த்து
லண்டனில் விருது முதல்வர் வாழ்த்து
லண்டனில் விருது முதல்வர் வாழ்த்து
ADDED : ஜூன் 26, 2025 06:45 AM

புதுச்சேரி : லண்டன், குரோய்டான் தமிழ்ச் சங்கம், சென்னை, மோகனரங்கன் தமிழ் ஆராய்ச்சி மையம் சார்பில், உலகத்தின் சிறந்த தமிழ் அறிஞர்கள், 100 பேரை கவுரவிக்கும் தமிழ்ப் பண்பாட்டு விழா கடந்த 18ம் தேதி லண்டன் நாடாளுமன்றத்தில் நடந்தது.
அதில், புதுச்சேரியை சேர்ந்த சுந்தரமுருகன், இந்தியப் பண்பாடு, தமிழ் மொழி குறித்து உரையாற்றினார்.
அதனை பாராட்டி லண்டன் குரோய்டான் தமிழ்ச் சங்கம், சென்னை மோகனரங்கன் தமிழ் இயல் ஆராய்ச்சி மையம் சார்பில் 'செந்தமிழ்ச் சான்றோர் விருது' வழங்கப்பட்டது.
இதையடுத்து, புதுச்சேரி திரும்பிய சுந்தரமுருகன், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்.