/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஓட்டை உடைசல் வாகனத்தில் 'சேசிங்' முக்கிய கொள்ளையன் சுற்றி வளைப்புஓட்டை உடைசல் வாகனத்தில் 'சேசிங்' முக்கிய கொள்ளையன் சுற்றி வளைப்பு
ஓட்டை உடைசல் வாகனத்தில் 'சேசிங்' முக்கிய கொள்ளையன் சுற்றி வளைப்பு
ஓட்டை உடைசல் வாகனத்தில் 'சேசிங்' முக்கிய கொள்ளையன் சுற்றி வளைப்பு
ஓட்டை உடைசல் வாகனத்தில் 'சேசிங்' முக்கிய கொள்ளையன் சுற்றி வளைப்பு
ADDED : பிப் 25, 2024 04:06 AM
ரெட்டியார்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன், முத்து காஸ் ஏஜென்சி, ரத்னா ஸ்டோர்ஸ் ஆகிய கடைகளின் ஷட்டரை உடைத்து ரூ. 9 லட்சம் பணம் திருடப்பட்டது. மர்ம நபர் பணம்திருடும் 'சிசி டிவி'காட்சிகளை, தமிழகம், கர்நாடகா, கேரள மாநில குற்றப்பிரிவு போலீசாருக்கு புதுச்சேரி போலீசார் அனுப்பி வைத்து பழைய குற்றவாளிகளுடன் ஒப்பிட்டு பார்த்தனர்.
அதில், கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தை சேர்ந்த அருண், 30, என்ற நபர் புதுச்சேரியில் கைவரிசை காண்பித்தது தெரிய வந்தது. திருட்டுக்கு அருண் பயன்படுத்திய கார் பதிவு எண்ணை கொண்டு, சாலைகளில் இருந்த 200 'சிசி டிவி' காட்சிகளை போலீசார் கைப்பற்றினர்.
இறுதியாக,அருண் பணம் திருடிக் கொண்டு கர்நாடகா சென்றது தெரிய வந்தது.வடக்கு பிரிவு கிரைம் போலீசார், தங்களிடம் உள்ள ஓட்டை உடைசலான டெம்போ டிராவலர் வேனை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். இதற்கு தனி டிரைவரும் இல்லை. கிரைம் போலீசாரே மாறி மாறி வேனை ஓட்டிச் சென்றனர்.
மைசூர் அருகே அருண் பதுங்கி இருக்கும் தகவல் தெரிந்தது. புதுச்சேரி போலீசார் வாகனத்தில் அங்கு சென்றபோது, எதிரில் காரில் வந்த அருண்,போலீஸ் வேன் மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பித்தார்.
புதுச்சேரி கிரைம் டீம் தங்களிடம் உள்ள ஓட்டை உடைசல் வாகனத்தில், அருணின் காரை துரத்தினர். காட்டுபகுதியில் அருண் தனது காரை விட்டு விட்டு தப்பிச் சென்றார். போலீசார் காரை பறிமுதல் செய்து, அதே பகுதியில் பதுங்கியிருந்த அருணையும் கைது செய்தனர். புதுச்சேரி கொண்டு வரப்பட அருண் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அருண் மீது தமிழகத்தில் பெரம்பலுாரில் நகை கடையை உடைத்து 8 கிலோ தங்க நகையை திருடிய வழக்கு உள்ளிட்ட ஏராளமான வழக்குகளும், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் திருட்டு வழக்குகளும் உள்ளன.
அருண் கைது செய்யப்பட்ட தகவல் தெரிந்து, மகாராஷ்டிரா, கர்நாடகா போலீசார் கஸ்டடி எடுக்க திட்டமிட்டுள்ளனர்.