ADDED : மே 15, 2025 02:31 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை திரவுபதியம்மன் கோவிலில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் தேர் திருவிழா நேற்று நடந்தது.
உற்சவத்தில் துணை சபாநாயகர் ராஜவேலு, வைத்திலிங்கம் எம்.பி., மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.
தேர் மாட வீதியாக சென்று நிலைக்கு வந்தது. வரும் 16ம் தேதி மாலை 6:00 மணிக்கு திரவபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
