/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட விமர்சனம் தோல்வி; பொது தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசு பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட விமர்சனம் தோல்வி; பொது தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசு பள்ளிகள்
சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட விமர்சனம் தோல்வி; பொது தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசு பள்ளிகள்
சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட விமர்சனம் தோல்வி; பொது தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசு பள்ளிகள்
சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட விமர்சனம் தோல்வி; பொது தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசு பள்ளிகள்
ADDED : மே 18, 2025 10:53 PM
புதுச்சேரி : சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் குறித்த விமர்சனங்களை கடந்து, பொதுத் தேர்வில் புதுச்சேரி அரசு பள்ளிகள் சாதித்துள்ளன.
புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகள் அனைத்தும், கடந்தாண்டு சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டன. தமிழக அரசின் சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் சுலபமாக தேர்வு எழுதிய புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களால், கடினமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை சமாளிக்க முடியாது என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
சமீபத்தில் சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வு முடிவு வெளியானது. இதில், விமர்சனங்களை கடந்து புதுச்சேரி அரசு பள்ளிகள் சாதித்துள்ளன.
கடந்தாண்டு தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள் 78.10 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். ஆனால், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ், இந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 81.25 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த முறை பிளஸ் 2 பொதுத் தேர்விலும் தமிழக அரசின் சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ், புதுச்சேரி அரசு பள்ளிகளில் 85.35 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
தற்போது, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வில், 86.27 சதவீத மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாறிய உடனே, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தது; மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்தி கற்பித்தது உள்ளிட்ட புதுச்சேரி அரசின் முயற்சியால், சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் சாதித்துள்ளனர்.
இது, அடுத்து அவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளிலும் சாதிப்பர் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.