ADDED : ஜூன் 28, 2025 12:35 AM
புதுச்சேரி : இந்திரா சதுக்கத்தில் பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புதுச்சேரி, இந்திரா சதுக்கம் அருகில் சாலையோர நடை பாதையில், பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக, பொதுப்பணித் துறையினருக்கு புகார் வந்தது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி நேற்று முன்தினம் உருளையன்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பேனர் வைத்த நபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.