ADDED : ஆக 04, 2025 12:25 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : வைத்திக்குப்பம் சுடுகாடு அருகே கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
முத்தியால்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, வைத்திக்குப்பம் சுடுகாடு அருகே வாலிபர் ஒருவர் கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக தகவல் வந்தது.
அங்கு சென்ற போலீசார், சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர், சாரம், சக்தி நகரை சேர்ந்த துரைசிங்கம் மகன் ஜெய்கணேஷ், 19; என்பதும், மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, 35 கிராம் கஞ்சா பொட்ட லங்களை பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
