Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புற்றுநோய் விழிப்புணர்வு நடை பயணம் 

 புற்றுநோய் விழிப்புணர்வு நடை பயணம் 

 புற்றுநோய் விழிப்புணர்வு நடை பயணம் 

 புற்றுநோய் விழிப்புணர்வு நடை பயணம் 

ADDED : மார் 13, 2026 06:21 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஜிப்மர் மகளிர் தின கொண்டாட்ட குழு, மகப்பேறு மருத்துவ துறை இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. புதுச்சேரி கடற்கரை சாலையில் துவங்கிய நடை பயணத்தை ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேகி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மருத்துவ கண்காணிப்பாளர் வினோத் குமார், ஜிப்மர் இணை இயக்குநர் ரங்கபாஷியம், கொண்டாட்ட குழு தலைவர் பாவனா படே, மூத்த அதிாகரி ஹவா சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முக்கிய வீதிகள் வழியாக நடந்த இந்த நடை பயணத்தில் ஜிப்மர் டாக்டர்கள், செவிலியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், மார்பக புற்றுநோய்களுக்கு எதிரான ஆரம்ப கட்ட பரிசோதனைகள், தடுப்பூசி, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள், சரியான நேரத்தில் சிகிச்சை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us