ADDED : பிப் 24, 2024 06:33 AM

புதுச்சேரி : ஜிப்மர் மருத்துவ புற்றுநோயியல் துறை சார்பில், சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடை பிடிக்கப்பட்டது. இதனையொட்டி பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு 'திரை நேரத்தில் இருந்து பசுமை நேரத்திற்கு' என்ற தலைப்பில் சுவரொட்டிகள், ஓவியம், கடிதம் எழுதும் போட்டி நடத்தப்பட்டது. ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இறுதியில் முத்தியால்பேட்டை வாசவி இன்டர்நேஷனல் பள்ளி, லாஸ்பேட்டை சபரி வித்யாஷ்ரம் பள்ளி, சித்தானந்தா பள்ளி, விவேகானந்தா பள்ளி, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய மாணவர்கள் பரிசுகளை வென்றனர்.
தொடர்ந்து கடற்கரை சாலையில் காந்தி திடலில் இருந்து விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. புற்றுநோயில் இருந்து மீண்ட நோயாளிகள் தங்கள் அனுபவத்தினை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஜிப்மர் (பொ) இயக்குனர் கவுதம் ராய், கல்வி முதல்வர் விக்ரம் காடே, மருத்துவ புற்றுநோயியல் துறை பேராசிரியர் பிஸ்வஜித், டாக்டர் பிரசாந்த் கணேசன், பேராசிரியர்கள் ஸ்மிதா காயல், சுவாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.