/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரசார இயக்கம்: மா.கம்யூ., துவக்கம் பிரசார இயக்கம்: மா.கம்யூ., துவக்கம்
பிரசார இயக்கம்: மா.கம்யூ., துவக்கம்
பிரசார இயக்கம்: மா.கம்யூ., துவக்கம்
பிரசார இயக்கம்: மா.கம்யூ., துவக்கம்
ADDED : ஜூன் 14, 2025 01:15 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி அரசை கண்டித்து, மா.கம்யூ., சார்பில் மாநிலம் தழுவிய பிரசார இயக்கம் இன்று 14ம் தேதி துவங்குகிறது.
மாநிலச் செயலாளர் ராமச்சந்திரன் அறிக்கை:
புதுச்சேரியில் என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி ஆட்சியில் மாநிலத்தின் வளர்ச்சியும், மக்களின் வாழ்க்கைத் தரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால் நன்மை என்ற நம்பிக்கை புதுச்சேரியில் பொய்த்து விட்டது. மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கவோ, கடனை ரத்து செய்யவோ முன்வரவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்கேடு, வேலையின்மை, அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் முடக்கம், அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளன.
இதனை கண்டித்தும், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் மா.கம்யூ., நாளை 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை மாநிலம் தழுவிய பிரசார இயக்கம் நடத்த உள்ளது. இந்த பிரசார இயக்கத்தை இன்று மாலை 5:00 மணிக்கு, அண்ணா சிலை அருகே தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார்.