/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கம் நிறைவு வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கம் நிறைவு
வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கம் நிறைவு
வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கம் நிறைவு
வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கம் நிறைவு
ADDED : ஜூன் 14, 2025 02:11 AM

புதுச்சேரி : இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மற்றும் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் ஆகியன சார்பில், இணைந்து வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் நிறைவு விழா மங்கலம் கிராமத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் விஜயகுமார் வரவேற்றார். கூடுதல் வேளாண் இயக்குனர்கள் ஜெய்சங்கர், ஜாகிர் உசேன், விவசாயிகள் நலத்துறை இயக்குனர் வசந்தகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், விவசாயிகளுக்கு மண்வள அட்டையை வழங்கினார். வேளாண்துறை செயலர் நெடுஞ்செழியன், சிறப்பரையாற்றினார். வில்லியனுார், ஒதியம்பட்டு, அரியூர், திருக்காஞ்சி, கூடப்பாக்கம், இருளன் சந்தை பகுதிகளை சார்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
ஏற்பாடுகளை வில்லியனுார் உழவர் உதவியாக வேளாண் அலுவலர் உமாராணி, உதவி வேளாண் அலுவலர் தமிழ்செல்வன் உட்பட பலர் செய்திருந்தனர். துணை வேளாண் இயக்குனர் கலைச்செல்வி நன்றி கூறினார்.