Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்க முகாம்

வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்க முகாம்

வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்க முகாம்


ADDED : ஜூன் 04, 2025 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2025 01:16 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருபுவனை : இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, புதுச்சேரி குரும்பாபேட் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கம் -2025, கலிதீர்த்தாள்குப்பம் கிராமத்தில் நடத்தின.

மதகடிப்பட்டு, உழவர் உதவியக வேளாண் அதிகாரி நடராஜன் வரவேற்றார். இணை வேளாண் இயக்குனர் சிவசண்முகம் தலைமை தாங்கி, பிரசார இயக்க முகாமினை துவக்கி வைத்தார்.

மதகடிப்பட்டு துணை வேளாண் இயக்குனர் சாந்தி பால்ராஜ் வேளாண் வளர்ச்சிக்கான முக்கியத்துவம் குறித்து விளக்கினார். வேளாண் முயற்சியின் தொழில்நுட்ப உத்திகள் குறித்து வேளாண் நிபுணர் ஜெயந்தி பேசினார்.

வேளாண் அறிவியல் நிலைய பொறியாளர் பாஸ்கர் வேளாண்மையில் இயந்திரங்கள் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார். மணிலா விதைப்பு கருவி மூலம் விதைப்பு முறை செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

வேதியியல் பிரிவு வேளாண் அதிகாரி அருணா மண்வளம்,சமச்சீர் உரம், மற்றும் நுண்னுாட்ட சத்துக்களின் தேவை குறித்து விளக்கமளித்து விவசாயிகளுக்கு மண்வளஅட்டைகளை வழங்கினார்.

ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் பக்கிரி, புவனேஸ்வரி, ஆத்மா தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி, செயல்விளக்க உதவியாளர் ஜெய்சங்கர், சுபாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us