/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'புல்லட் புரூப்' கார் புதுச்சேரிக்கு வருகை 'புல்லட் புரூப்' கார் புதுச்சேரிக்கு வருகை
'புல்லட் புரூப்' கார் புதுச்சேரிக்கு வருகை
'புல்லட் புரூப்' கார் புதுச்சேரிக்கு வருகை
'புல்லட் புரூப்' கார் புதுச்சேரிக்கு வருகை
ADDED : மார் 23, 2025 04:05 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்பிற்காக புல்லட் புரூப் கார் வாங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர், புதுச்சேரி பல்கலைக்கழகம் உள்ளிட்டவையில் நடக்கும் பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ள வி.வி.ஐ.பி.,க்கள் வந்து செல்கின்றனர்.
வி.வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்பிற்காக குண்டு துளைக்காத அம்பாசிட்டர் கார் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த கார் பழுதானால், வி.வி.ஐ.பி.,க்கள் வரும்போது வெளிமாநிலத்தில் இருந்து குண்டு துளைக்காத கார் வரவழைத்து பயன்படுத்தி வந்தனர். புதுச்சேரி போலீசுக்கு என தனியாக குண்டு துளைக்காத கார் வாங்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 1 மாதத்திற்கு முன்பு குண்டு துளைக்காத பார்ச்சூனர் கார் வாங்கப்பட்டது.
இந்த புதிய கார், கோரிமேடு டி.ஐ.ஜி., அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.