/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ப்ரைனி ப்ளூம்ஸ் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி ப்ரைனி ப்ளூம்ஸ் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ப்ரைனி ப்ளூம்ஸ் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ப்ரைனி ப்ளூம்ஸ் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ப்ரைனி ப்ளூம்ஸ் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 17, 2025 06:46 AM

புதுச்சேரி: திருக்கனூர் ப்ரைனி ப்ளூம்ஸ் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளியில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவ, மாணவிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நடப்பு 2024- 25ம் கல்வி ஆண்டில், பள்ளியில், 10வது மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பில் 115 பேர் 450க்கு மேலும், 7 பேர் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 94 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2வில் 89 பேர் 450க்கு மேலும், 2 பேர் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 73 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சாதனை மாணவர்களை அரவிந்த் கல்விக் குழும தலைவரான வழக்கறிஞர் அருண்குமார், பள்ளி துணை சேர்மன் திவ்யா அருண்குமார் ஆகியோர் பாராட்டினர்.
நிகழ்ச்சியில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.