/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'நிடி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு புதுச்சேரி வளர்ச்சியை பாதிக்கும்' 'நிடி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு புதுச்சேரி வளர்ச்சியை பாதிக்கும்'
'நிடி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு புதுச்சேரி வளர்ச்சியை பாதிக்கும்'
'நிடி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு புதுச்சேரி வளர்ச்சியை பாதிக்கும்'
'நிடி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு புதுச்சேரி வளர்ச்சியை பாதிக்கும்'
ADDED : மே 26, 2025 12:27 AM
புதுச்சேரி : நிடி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பது மாநில வளர்ச்சியை பாதிக்கும் என முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை:
புதுச்சேரி மாநிலத்தின் நிதி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து பேச வேண்டிய நிடி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பது மாநில வளர்ச்சியை பாதிக்கும்.முக்கிய கூட்டங்களுக்கு செல்லாமல், சம்பந்தப்பட்ட துறையின் மத்திய அமைச்சரை சந்திக்காமல் மாநிலம் பல்வேறு துறையில் பின்தங்கி உள்ளது. ஐ.டி.பார்க், புதிய வேலை வாய்ப்புகளை பெருக்குவதாக கூறிவிட்டு, இன்று பட்டதாரிகளை மாடுகள் மேய்க்க சொல்வது நியாயமா.புதுச்சேரி வேலை வாய்ப்பு இல்லாமல், பல திட்டங்கள் ஆரம்ப கட்டத்தில் நிற்பதற்கு, இங்குள்ள அரசு மத்திய அரசின் இதுபோன்ற கூட்டத்தில் பேசாமல் இருப்பது தான் காரணம். வரும் சட்டசபை தேர்தலில் புதிய நபர்கள், படித்தவர்கள் ஆட்சி அமைக்க வர வேண்டும். மக்கள் அதற்கு ஆதரவு தர வேண்டும்.
ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் நிடி ஆயோக் கூட்டத்தை எதிர்க்கட்சிகளே புறக்கணிக்கவில்லை. பா.ஜ., கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்., முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பது வளர்ச்சியை பாதிக்கும் என்பதை உணர வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.