Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொம்மபுரம் ஆதினம் சிவஞானபாலய சுவாமிகள் நுாற்றாண்டு கருத்தரங்கு

பொம்மபுரம் ஆதினம் சிவஞானபாலய சுவாமிகள் நுாற்றாண்டு கருத்தரங்கு

பொம்மபுரம் ஆதினம் சிவஞானபாலய சுவாமிகள் நுாற்றாண்டு கருத்தரங்கு

பொம்மபுரம் ஆதினம் சிவஞானபாலய சுவாமிகள் நுாற்றாண்டு கருத்தரங்கு

ADDED : அக் 19, 2025 03:45 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: மயிலம் பொம்மபுரம் ஆதினம், ஸ்ரீ சிவஞானபாலய சாமிகள் நுாற்றாண்டு விழாவையொட்டி, கருத்தரங்கம் நடந்தது.

மயிலம் ஸ்ரீமத் சிவஞானபாலய சுவாமிகள் கல்லுாரி, புதுச்சேரி பல்கலைக்கழக சுப்ரமணிய பாரதியார் தமிழியற் புலம்,இணைந்து இரண்டு நாட்கள் கருத்தரங்கை நடத்தின. மயிலம் கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார்.

பல்கலைக்கழக மனிதவள மேம்பாட்டுத்துறை மேலாண் இயக்குனர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன், புலவர் ஆதிகேசவன், பல்கலைக்கழக கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கிளமெண்ட் சகாயராஜ் லுார்து, பேராசிரியர் சுடலைமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி அடிகளார் 180க்கும் மேற்பட்ட கட்டுரைகள் அடங்கிய பன்னாட்டு கருத்தரங்க ஆய்வு கோவையை வெளியிட்டார்.

பின், இந்திய விடுதலைக்கு முன்பாகவே, மயிலத்தில் கல்விப் பணியை தொடங்கியவர் என அவர் புகழாரம் சூட்டினார்.

மயிலம் பொம்மைபுரம் ஆதீனத்தின், கல்விப்பணி இப்பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி வாழ வைத்திருக்கிறது என, அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசினார்.

நிகழ்ச்சியில், பாலமுருகன் உட்பட பல்கலைக்கழக மாணவர்கள், மயிலம் கல்லுாரி மாணவர்கள், சித்தர் சிவஞானி கல்லுாரி, ராஜேஸ்வரி கல்லுாரி மாணவர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், தமிழ் சங்க அமைப்பினர், சைவ அடியார்கள் பங்கேற்றனர்.

பேராசிரியர் கருணாநிதி நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us