ADDED : ஜன 07, 2024 05:08 AM
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம், ஏனாம் பிராந்தியம் ஆந்திரா காக்கிநாடா அருகில் உள்ளது.
அந்த பகுதியில் உள்ள தரியாலாடிப்போ கிராமத்தை சேர்ந்த காமாடி கங்காதிரி, என்ற மீனவர், மீன் பிடிக்க தனது படகை எடுத்தார். படகில் இருந்த மோட்டாரை இயக்கிய போது மோட்டாரில் இருந்து தீ ஏற்பட்டு படகு முழுதும் தீப்பிடித்து எரிந்தது. படகில் இருந்த அவர், தீயில் கருகி சம்பவயிடத்திலேயே இறந்தார். இது குறித்து ஏனாம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.