/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'சைலண்ட் மோடி'ல் பா.ஜ.; அதிருப்தியில் தொண்டர்கள் 'சைலண்ட் மோடி'ல் பா.ஜ.; அதிருப்தியில் தொண்டர்கள்
'சைலண்ட் மோடி'ல் பா.ஜ.; அதிருப்தியில் தொண்டர்கள்
'சைலண்ட் மோடி'ல் பா.ஜ.; அதிருப்தியில் தொண்டர்கள்
'சைலண்ட் மோடி'ல் பா.ஜ.; அதிருப்தியில் தொண்டர்கள்
ADDED : ஜூன் 08, 2025 03:58 AM
தேசிய கட்சியான பா.ஜ., நாட்டின் பல மாநிலங்களில் அதிகார மையமாக இருந்த போதிலும், புதுச்சேரியில் கடந்த 2020ம் ஆண்டுக்கு முன்புவரை இருந்த இடம் தெரியாமலே இருந்தது.
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ., தேசிய தலைமை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால், காங்., உள்ளிட்ட பிரதான கட்சிகளின் முக்கியஸ்தர்களை பா.ஜ.,வில் சங்கமித்தனர். மாற்றுக் கட்சியில் இருந்து சங்கமித்தவர்கள் வேட்பாளர்களாக களம் இறக்கி, கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது.
தேர்தல் நேரத்தில் இருந்த வேகம் அடுத்த 2 ஆண்டுகளும் கட்சி நிர்வாகிகள் அதே வேகத்தில் ஆலோசனைக் கூட்டம், நிர்வாகிகள் சந்திப்பு, உறுப்பினர் சேர்க்கை படு பிசியாக இருந்தனர். கட்சியும் நல்ல செயல்பாட்டில் இருந்தது.
இந்நிலையில் கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தது. அதில், கிளை வட்டார, மாவட்ட நிர்வாகிகள் நியமித்த நிலையில் மாநில தலைமையை தேர்வு செய்வதில் மிகப் பெரிய குழப்பம் நிலவி வருகிறது.
பிற மாநிலங்களில், தேர்தல் நடத்தி மாநில தலைமையை நியமித்துள்ள நிலையில், சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியில் ஓராண்டிற்கு மேலாக புதிய தலைமை அறிவிக்கப்படாமல், கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.
இந்நிலையில், கூட்டணியில் ஆட்சி அதிகாரரத்தில் உள்ளவர்கள், ஆளுக்கொரு திசையில் செயல்படுகின்றனர். இவர்களை கட்சி அலுவலகத்தில் ஒரு சேர பார்க்க முடியாமல் போய்விட்டது.
புதுச்சேரி அரசியல், கட்சி செல்வாக்கை விட தனிநபர் செல்வாக்கே பிரதானமானது. இதனால், பா.ஜ.,வில் அதிகாரத்தில் இருப்பவர்கள், கட்சியை பலப்படுத்துவதற்கு பதில், தங்களை பலப்படுத்தி, முன்னிலைப்படுத்தி வருகின்றனர்.
வரும் தேர்தலில் கட்சியில் சீட் இல்லை என்றாலும், சுய செல்வாக்கில் வெற்றி பெறும் நிலையை உருவாக்கி வருகின்றனர்.
இது பா.ஜ.,வினர் துவக்க காலத்தில் அடிப்படை உறுப்பினராக இருந்து கட்சிக்காக உழைத்து உண்மையான தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், பா.ஜ., சித்தாந்தை உயிர் மூச்சாக கொண்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் 'சைலண்ட்' மோடிற்கு சென்றுவிட்டனர்.