Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'தினமலர்' நாளிதழ் படித்தால் தான் அன்றைய தினம் முழுமை பெறும்: பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம்

'தினமலர்' நாளிதழ் படித்தால் தான் அன்றைய தினம் முழுமை பெறும்: பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம்

'தினமலர்' நாளிதழ் படித்தால் தான் அன்றைய தினம் முழுமை பெறும்: பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம்

'தினமலர்' நாளிதழ் படித்தால் தான் அன்றைய தினம் முழுமை பெறும்: பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம்

ADDED : செப் 06, 2025 03:16 AM


Google News
புதுச்சேரி: தினமலரின் 75ம் ஆண்டு மிகவும், பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரியது. காலையில் எழுந்தவுடன், தினமலர் நாளிதழில், உலக செய்தி, உள்ளூர் மற்றும் விளையாட்டு செய்திகளை நாம் தெரிந்து கொள்ள முடியும். உண்மையாக செய்திகளை வெளியிடும் பத்திரிகையாக திகழ்ந்து வருகிறது.

தினமலர் நாளிதழை, படிக்காமல், அன்றைய தினம் எங்களுக்கு முழுமை பெறுவதில்லை. இந்த நாளிதழை படித்தால், இந்து, இன்டியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகையை படித்தது போல மனநிறைவு பெறும்.

ஒரு கட்சியை சாராமல், குற்றங்கள் இருந்தாலும், அதை பற்றி நடுநிலையோடு அனைத்து செய்திகளை வெளியிடுகின்றனர்.

தமிழர்களுக்கும், உலகளவில் அனைத்து வாசகர்களுக்கு தினலமலரின் தொண்டு மகத்தானது. பா.ஜா., சார்பில், தலைவர் என்ற முறையில், நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சமீபத்தில் தினமலர் சார்பில், எழுச்சியோடு, எக்ஸ்போ நடத்தினார்கள்.

ஒரே இடத்தில் அனைத்து வீட்டு பொருட்களை குவித்து விற்பனை செய்யப்பட்டது. நான் கூட ேஷாபா ஒன்றை வாங்கினேன். தரமாகவும், விலை குறைவாகவும் இருந்தது.

தினமலர் சார்பில், அடுத்தது கோலாப்போட்டி நடத்துவார்கள். அதற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அதே போன்று, பட்டம் நாளிதழ் வழங்குவதன் மூலம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.

தினமலர் நிறுவனம் மேலும், வளர வேண்டும். நிறுவனருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us