/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கோவில் திருப்பணிக்கு பா.ஜ., நன்கொடைகோவில் திருப்பணிக்கு பா.ஜ., நன்கொடை
கோவில் திருப்பணிக்கு பா.ஜ., நன்கொடை
கோவில் திருப்பணிக்கு பா.ஜ., நன்கொடை
கோவில் திருப்பணிக்கு பா.ஜ., நன்கொடை
ADDED : ஜன 07, 2024 04:55 AM

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் சக்திவேல் முருகன் கோவில் திருப்பணிக்கு பா.ஜ., மாநில செயலாளர் சரவணன் 1 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.
உழவர்கரை தொகுதி, ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் அமைந்துள்ள சக்திவேல் முருகன் கோவிலில், முகப்பு மண்டபம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இப்பணிக்காக பா.ஜ., மாநில செயலாளர் உழவர்கரை சரவணன், 1 லட்சம் ரூபாய் நன்கொடையாக கோவில் நிர்வாகத்திடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், கோவில் நிர்வாகிகள் குருசாமி, தேவநாதன், வீரமுத்து, அண்ணாமலை, பிரகாஷ், சத்யா, அருள், அன்பழகன் மற்றும் பா.ஜ., பிரமுகர்கள் நடராஜன், ஆறுமுகம், முருகன், அப்பு, கனகலிங்கம், ரவிந்திரன், பாலாஜி, பார்த்திபன், மணி, விமல், ரெஸ்லன், ஸ்டீபன், குமரேசன், மது உடனிருந்தனர்.