/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கருத்து கேட்பு கூட்டத்தில் பா.ஜ., - கம்யூ., விவாதம் கருத்து கேட்பு கூட்டத்தில் பா.ஜ., - கம்யூ., விவாதம்
கருத்து கேட்பு கூட்டத்தில் பா.ஜ., - கம்யூ., விவாதம்
கருத்து கேட்பு கூட்டத்தில் பா.ஜ., - கம்யூ., விவாதம்
கருத்து கேட்பு கூட்டத்தில் பா.ஜ., - கம்யூ., விவாதம்
ADDED : மார் 21, 2025 04:29 AM
புதுச்சேரி : புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும் சட்டசபை தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று மாலை நடந்தது.
கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். சப்-கலெக்டர் இஷிதா ரதி முன்னிலை வகித்தார். இதில் ஓட்டுப் பதிவு அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ஒவ்வொரு கட்சியை சேர்ந்த பிரநிதிநிதிகள் சட்டசபை தேர்தல் குறித்த தங்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். அப்போது பா.ஜ., விற்கும், மா.கம்யூ., கட்சியை சேர்ந்தவர்களுக்கும் இடையே கருத்துமோதல் ஏற்பட்டது.
இதனால் இருகட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளும் ஒருவரையொருவரை காரசாரமாக விமர்ச்சித்தனர். இருதரப்பை சேர்ந்தவர்களையும் அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.