/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கூத்தாண்டவர் கோவில் திருப்பணிக்கு பூமி பூஜை கூத்தாண்டவர் கோவில் திருப்பணிக்கு பூமி பூஜை
கூத்தாண்டவர் கோவில் திருப்பணிக்கு பூமி பூஜை
கூத்தாண்டவர் கோவில் திருப்பணிக்கு பூமி பூஜை
கூத்தாண்டவர் கோவில் திருப்பணிக்கு பூமி பூஜை
ADDED : ஜூன் 08, 2025 08:20 PM

வில்லியனுார்: பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் திருப்பணியை அமைச்சர் சாய்சரவணன்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பம் கிராமத்தில் சங்கராபரணி ஆற்றங்கரையில் பழமையான கூத்தாண்டவர் கோவில் உள்ளது.
இந்த கோவில் நவீன வசதியுடன் புதுப்பிக்கும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது.
நிகழ்ச்சிக்கு அமைச்சர் சாய்சரவணன் குமார் தலைமை தாங்கினார். அசோக்பாபு எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திகேயன், இந்து சமய அறநிலைத்துறை செயலாளர் நெடுஞ்செழியன், ஆணையர் சிவசங்கரன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் பூமி பூஜை செய்து திருப்பணியை துவக்கி வைத்தனர்.