/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பூரணாங்குப்பத்தில் பீஷ்ம ஹண்ட் நிகழ்ச்சி பூரணாங்குப்பத்தில் பீஷ்ம ஹண்ட் நிகழ்ச்சி
பூரணாங்குப்பத்தில் பீஷ்ம ஹண்ட் நிகழ்ச்சி
பூரணாங்குப்பத்தில் பீஷ்ம ஹண்ட் நிகழ்ச்சி
பூரணாங்குப்பத்தில் பீஷ்ம ஹண்ட் நிகழ்ச்சி
ADDED : ஜூன் 22, 2025 02:01 AM

புதுச்சேரி : இந்திய தொழில் கூட்டமைப்பு, புதுச்சேரி யங் இந்தியன்ஸ் மற்றும் சான்வி கல்வி அறக்கட்டளை சார்பில் 'பீஷ்ம ஹண்ட்' நிகழ்ச்சி பூரணாங்குப்பத்தில் நடந்தது.
இந்திய தொழில் கூட்டமைப்பின் புதுச்சேரி யங் இந்தியன்ஸ் மற்றும் சான்வி கல்வி அறக்கட்டளை இணைந்து 'பீஷ்ம ஹண்ட்' என்ற தலைப்பில் கிராமப்புற குழந்தைகளிடம் உள்ள திறமைகளை கண்டறியும் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, 2ம் ஆண்டும் துவங்க நிகழ்ச்சி பூரணாங்குப்பம் சான்போர்டு பொதுப் பள்ளியில் நடந்தது.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக ஆரோவில் இசையம்பளம் பள்ளியை சேர்ந்த சஞ்சிவ் ரங்கநாதன், இந்திய தொழில் கூட்டமைப்பு புதுச்சேரி தலைவர் நடராஜன், எஸ்.பி., மாறன், யங் இந்தியன் சேர்மன் ரகுநந்தன் கணபதி ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், கிராமப்புற குழந்தைகளின் ஓவிய திறமை, காகித கைவினை திறமை, சிக்கல்களை கையாளும் திறமை, டெரக்கோட்டா கைவினை திறமை, தகவல்களை பரிமாறும் திறமை, ரோபோட்டிக்ஸ் மற்றும் உடற்தகுதி தேர்வு ஆகிய பிரிவுகளில் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.