Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாரதியார் பல்கலைக்கூடத்தில் ரூ.7.33 கோடியில் கலையரங்கம்

பாரதியார் பல்கலைக்கூடத்தில் ரூ.7.33 கோடியில் கலையரங்கம்

பாரதியார் பல்கலைக்கூடத்தில் ரூ.7.33 கோடியில் கலையரங்கம்

பாரதியார் பல்கலைக்கூடத்தில் ரூ.7.33 கோடியில் கலையரங்கம்

ADDED : செப் 27, 2025 02:15 AM


Google News
Latest Tamil News
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில், 7.33 கோடி ரூபாய் மதிப்பில், திறந்தவெளி கலையரங்கம் கட்டும் பணியை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.

உத்தராஞ்சல் மற்றும் புதுச்சேரி மாநில கலைப்பண்பாட்டுத்துறை இணைந்து, அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக் கூடத்தில், ரூ.20 கோடி மதிப்பில், ரவிந்திரநாத் தாகூர் பெயரில், ஒருங்கிணைந்த கலாசார காம்பளக்ஸ் கட்டும் பணி துவக்கப்பட்டது.

இதில், கல்லுாரி வகுப்பறைகள், அரங்கம், நுாலகம், அலுவலகம் என பல்வேறு வதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 9 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கட்டுமான பணி நடந்து வருகிறது. மேலும் அடுத்த கட்ட பணி மற்றும் திறந்தவெளி கலையரங்கம் கட்டுவதற்கு ரூ.7.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், பாஸ்கர் எம்.எல்.ஏ., வரவேற்றார். அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், திருமுருகன், சபாநாயகர் செல்வம், கலைப்பண்பாட்டுத்துறை உறுப்பினர் செயலர் முரளிதரன், பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் கோட்ட செயற்பொறியாளர் வைத்தியநாதன், உதவிப்பொறியாளர் சீனுவாசராம், பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் (பொ) அன்னபூர்ணா உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us