/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/26 வேட்பாளர்களின் செலவு ரூ.1.35 கோடி தானாம் நம்புங்க...; மாநில தேர்தல் துறை இறுதி செய்து வெளியீடு26 வேட்பாளர்களின் செலவு ரூ.1.35 கோடி தானாம் நம்புங்க...; மாநில தேர்தல் துறை இறுதி செய்து வெளியீடு
26 வேட்பாளர்களின் செலவு ரூ.1.35 கோடி தானாம் நம்புங்க...; மாநில தேர்தல் துறை இறுதி செய்து வெளியீடு
26 வேட்பாளர்களின் செலவு ரூ.1.35 கோடி தானாம் நம்புங்க...; மாநில தேர்தல் துறை இறுதி செய்து வெளியீடு
26 வேட்பாளர்களின் செலவு ரூ.1.35 கோடி தானாம் நம்புங்க...; மாநில தேர்தல் துறை இறுதி செய்து வெளியீடு

லட்சத்தில்....
லோக்சபா தேர்தலில் 75 லட்சம் செலவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் இத்தொகைக்குள்ளளாகவே 26 வேட்பாளர்களும் செலவு செய்ததாக கணக்கு சமர்ப்பித்துள்ளனர். பிரதான கட்சி வேட்பாளர்களில் ஐந்து பேர் மட்டும் லட்சத்தில் செலவு செய்துள்ளதாக கணக்கு காட்டியுள்ளனர். எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட காங்.,வேட்பாளர் வைத்திலிங்கம் எம்.பி., 39 லட்சத்து 80 ஆயிரத்து 196 ரூபாய் செலவு செய்துள்ளார். பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயம் 53 லட்சத்து 29 ஆயிரத்து 927 ரூபாய் செலவு செய்துள்ளார். இதன் மூலம் பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயத்தை காட்டிலும் 13 லட்சத்து 49 ஆயிரத்து 731 ரூபாய் குறைவாகவே செலவு செய்து வைத்திலிங்கம் வெற்றி பெற்று எம்.பி., ஆனார். அடுத்ததாக அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தன் 26 லட்சத்து 18 ஆயிரத்து 927 ரூபாய், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 7 லட்சத்து 73 ஆயிரத்து 480 ரூபாய், சுசி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சங்கரன் 1 லட்சத்து 35 ஆயிரத்து 978 ரூபாய் செலவு செய்துள்ளனர்.
ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை
மற்ற 21 வேட்பாளர்கள் 1 லட்சத்திற்குள்ளாகவே செலவு செய்துள்ளனர். பெட்ரோல் பங்க் சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி, கேரம் போடு சின்னத்தில் போட்டியிட்ட மற்றொரு சுயேச்சை வேட்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்று தங்களுடைய தேர்தல் செலவின கணக்கில் தெரிவித்துள்ளனர்.