Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பேரியாட்ரிக், மெடபாலிக் அறுவை சிகிச்சையில் உடல் பருமன் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு

பேரியாட்ரிக், மெடபாலிக் அறுவை சிகிச்சையில் உடல் பருமன் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு

பேரியாட்ரிக், மெடபாலிக் அறுவை சிகிச்சையில் உடல் பருமன் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு

பேரியாட்ரிக், மெடபாலிக் அறுவை சிகிச்சையில் உடல் பருமன் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு

ADDED : மார் 23, 2025 04:10 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: சென்னை, கிரீன்வேஸ் அப்போலோ மருத்துவமனை பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜ் பழனியப்பன் கூறியதாவது:

இந்தியாவில் 28 சதவீதம் பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 80 சதவீதம் பேர் நோய்வாய்பட்டுள்ளனர். உலகளவில், உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் பட்டியலில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது.

இந்தியாவில் தற்போது 35 சதவீதம் பேர் இளைஞர்களாக உள்ளனர். வரும் 2030 ஆண்டில், வயதாகி அதிக நோயாளிகள் உள்ள நாடாக இந்தியா உருவாகும் நிலை ஏற்படும். இதை தவிர்க்க 40 சதவீத்திற்கும் மேற்பட்டோர் உடல் பருமனை குறைக்க வேண்டும்.

உடல் பருமனால், டைப் 2 நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் சரியான உறக்கம் இன்றி சுவாச பாதை பிரச்னையால் குறட்டை விடுதல் போன்ற தீவிரமான நோய்களை உருவாக்குகிறது. வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்கம், உடற்பயிற்சியால் 40 சதவீதம் பேருக்கு மட்டுமே எடையிழப்பு சாத்தியம். மற்றவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவை.

பேரியாட்ரிக் மற்றும் மெடபாலிக் அறுவை சிகிச்சை, எடையிழப்பு, உடல் பருமன் தொடர்புடைய நோய்களை குணப்படுத்தும் தீர்வாக உருவாகி உள்ளது.

பேரியாட்ரிக், மெடபாலிக் அறுவை சிகிச்சையில், வயிற்றின் 80 சதவீத பகுதி அளவை குறைக்கும் ஸ்லீவ் காஸ்ட்ரக்டமி (வி.எஸ்.ஜி) முறை, உண்ணும் உணவில் ஒரு பகுதி குடலில் செல்லாமல் பைபாஸ் செய்யும் காஸ்ட்ரிக் பைபாஸ் முறை, ஒன் அனஸ்டமோசிஸ் காஸ்ட்ரிக் பைபாஸ் முறைகள் உள்ளன.

இந்த சிகிச்சைகள் மூலம் உடல் எடை குறைவதுடன், 80 சதவீதம் பேருக்கு டைப் 2 நீரிழிவு பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

பி.எம்.எஸ்., அளவு 35 அல்லது அதற்கு அதிகமாக இருப்பவர்களும், பி.எம்.எஸ்., 30 மற்றும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக உடல் எடை தொடர்பான நோய்கள் உள்ளவர்கள், உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி வழிகளில் பலன் கிடைக்காதவர்களுக்கு பேரியாட்ரிக் மற்றும் மெடபாலிக் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.

அப்போலோ மருத்துவமனையில், பேரியாட்ரிக் மற்றும் மெடபாலிக் அறுவை சிகிச்சையில் கடந்த 14 ஆண்டுகளில் 2800க்கும் மேற்பட்டோர் பலன் பெற்றுள்ளனர்.

மயக்கமருந்து, இதய, நுரையீரல் துறை நிபுணர்கள் ஆலோசனை பெற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டால், பெருமளவில் உடல் எடையை குறைக்க முடியும்.

அப்போலோ மருத்துவமனையில் அதிகபட்சம் 346 கிலோ எடையுள்ளவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 10 பேர் இந்த அறுவை சிகிச்சை செய்துள்ளனர். சிகிச்சை முறையை பொருத்து குறைந்தபட்சம் ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை செலவாகும். தனியார் மருத்துவ காப்பீடுகள் மூலமும் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us