/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உடலுக்கு வலிமை சேர்க்கும் சமநிலை ஆசனங்கள் உடலுக்கு வலிமை சேர்க்கும் சமநிலை ஆசனங்கள்
உடலுக்கு வலிமை சேர்க்கும் சமநிலை ஆசனங்கள்
உடலுக்கு வலிமை சேர்க்கும் சமநிலை ஆசனங்கள்
உடலுக்கு வலிமை சேர்க்கும் சமநிலை ஆசனங்கள்

பர்ஷவோத்தான ஆசனம்
சமஸ்திதி நிலையில் நின்று, மூச்சை உள்ளிழுத்தபடி குதித்து, முடிந்த அளவிற்கு கால்களை அகலப்படுத்தி, கைகளை தோள்பட்டை அளவிற்கு நீட்டிய நிலையில் இருக்கவும். மூச்சை உள்ளடக்கி வலது கால் மற்றும் தலையை வலப்பக்கம் திருப்பி, இடது கால் நேராக இருக்க வேண்டும். உடலையும், கைகளையும் ஒரே நேரம் வலது பக்கம் திருப்பி, பின்பக்கமாக இரு கைகளையும் முட்டியில் பிடித்து இணைக்கவும். தலையை பின்புறம் வளைத்து, மூச்சை வெளியேற்றியபடி, முன்னோக்கி குனித்து தலையை கால் முட்டியில் தொடும்படி கொண்டு வரவும். முட்டியை மடிக்காமல் நேராக வைக்க வேண்டும்.
இடைப்பட்ட நிலை
சமஸ்திதியில் இருந்து மூச்சை வெளியிட்டபடி குதித்து முடிந்த அளவிற்கு கால்களை அகலப்படுத்தவும். கைகளை நீட்டியபடி தோள் அளவிற்கு துாக்கவும். மூச்சை உள்ளிழுத்து கைகளை தலைக்கு மேல் முடிந்த அளவு நீட்டி துாக்க வேண்டும்.
பாதோத்தான ஆசனம்
கைகள் தலைக்கு மேல் நீட்டிய நிலையில் இருந்து மூச்சை வெளியிடப்படி முன்னால் குனியவும். கைகளை கால்களுக்கு நடுவே ஒரே கோட்டிலுள்ளது போல் முழுவதும் கீழே வைக்கவும். மூச்சை உள்ளிழுத்து தலையை துாக்கவும். முதுகையும், முதுகுத்தண்டையும் முடிந்த அளவு நீட்டியபடி மூச்சை வெளியிட்டு, தலை தரையைத் தொடும்படி குனியவும். தலை, கை, கால் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் இருக்க வேண்டும். கால்கள் எவ்வளவு அகலமாக உள்ளதோ அவ்வளவு நல்லது. பத்து எண்ணிக்கையில் இருந்து, பின் மூச்சை உள்ளிழுத்து உடலை கைகளுடன் மேலே துாக்கி, மூச்சை வெளியிட்டுவிட்டு குதித்து சமஸ்திதி நிலைக்கு திரும்பவும். சிறிது நேரம் ஓய்வெடுத்த பின் இருமுறை திரும்பச் செய்யவும்.
அர்த சந்திர ஆசனம்
சமஸ்திதி நிலையில் மூச்சை உள்ளிழுத்து குதித்து கால்களை அகலப்படுத்தி, கைகளை தோள்பட்டை அளவிற்கு நீட்டவும்.