/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : செப் 09, 2025 06:40 AM

புதுச்சேரி : இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை, கண் மருத்துவத்துறை, 'சகோதரன்' தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் திருநங்கைகள் சமூகத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கண் மருத்துவத்துறை தலைவர் தனிகாசலம் வரவேற்றார்.
உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதன் துவக்கி வைத்தார்.
சகோதரன் அமைப்பு நிறுவனர் ஷீத்தல் வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக டாக்டர் ரவி கலந்து கொண்டு, கண்களை தானமாக வழங்கியவர்களின் குடும்பத்தினருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.
கண் டாக்டர் செந்தமிழன் ரெனே, கண் தானம் மற்றும் கண் வங்கி தொடர்பாக ஒலி, ஒளி விளக்கம் அளித்தார்.டாக்டர் பிரணீதா நன்றி கூறினார்.
முன்னதாக, கண் தானம் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில், 60க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர்.