/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சவராயலு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிசவராயலு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
சவராயலு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
சவராயலு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
சவராயலு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜன 05, 2024 06:33 AM

புதுச்சேரி : புதுச்சேரி சவராயலு நாயகர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் இயற்கையோடு இணைந்த வாழ்வியல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் இந்திரகுமாரி வரவேற்றார். டாக்டர் கோபி நோக்கவுரையாற்றினார்.
சுற்றுச்சூழல் கிளப் மாணவர்கள் கவாஸ்கர், சிவபாலன் ஆகியோர் இயற்கையோடு இணைந்த வாழ்வியல் வழிகள், 'மீன் வாங்கலையோ மீன்' என்ற தலைப்பில் நாடகம், விளையாட்டு, பாடல், வசனம் வழியாக வெளிப்படுத்தினர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக, மாணவிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அனைத்து பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஓவிய ஆசிரியர் ரவி நன்றி கூறினார்.