ADDED : ஜூன் 07, 2025 01:43 AM

புதுச்சேரி : புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு துறையின் கீழ் விலை கண்காணிப்பு மற்றும் ஆதார பிரிவு சார்பில் கோரிமேடு இந்திரா காந்தி அரசு மேல்நிலை பள்ளியில் நியாமான மருந்துகளின் விலை, நிலையான சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பள்ளி துணை முதல்வர் சந்திரன் வரவேற்றார். மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரி ஆனந்த கிருஷ்ணன், திட்ட ஒருங்கிணைப்பாளர், கள ஆய்வாளர், மருந்து ஆய்வாளர் கலந்து கொண்டனர்.
முகாமில், 'நியாமான மருந்துகளின் விலை, நிலையான சுகாதரம்' தலைப்பில் பொம்மலாட்டம் நிகழ்ச்சியின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, மத்திய அரசால் உருவாக்கப்பட்ட பார்மா சகி தம் எனும் செயலியின் மூலம் மக்கள் மருந்துகளின் சரியான விலையை தெரிந்து கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, மாணவர்களிடையே மருந்துகளை பயன்படுத்துவது சம்மந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.